Apr 14 2017
யேர்மன் சுவெற்றா ஸ்ரீகனகதுர்கா ஆலயத்தில் (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை !
அன்பார்ந்த ஸ்ரீகனகதுர்கா பக்தஅடியார்களே!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஸ்ரீகனகதுர்கா அடியார்கள்அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
காலை ஸ்ரீகனகதுர்காவுக்காண சிறப்பு பூசைஆரம்பமாகி ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று ஸ்ரீகனகதுர்கா எழுந்தருளி வீதியுலா வரும் காட்சி இடம்பெற இருக்கின்றது என்பதனை ஸ்ரீகனகதுர்கா அடியார்களுக்கு அறியத் தருகிறோம்
மருத்து நீர் 13/04/2017 அன்று மாலை 18.00 மணிக்கு ஆலயத்தின் பூசை நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூசை நேரத்தில் பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்கள் அன்றையதினம் ஆலய குருக்களிடம் பெற்றுக்கொள்ளலாம்
Apr 14 2017
டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பாக நடந்தேறியது
ஏவிளம்பி தமிழ் சித்திரை புத்தாண்டு முன்னிட்டு டோட்மெண்ட் ஹொம்புறுக் நகரில் மெளலீஸ்வரம்என பெயர் விளங்கும் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் இன்று விசேஷ ஆராதனைகளும்,விசேஷ பூஜைகளும் சிறப்பாக இனிதே நடைபெற்றது.
இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து இன்றய சித்திரை வருட ஆராதனையில் கலந்துகொள்ள சிவபெருமான் உள்வீதி உலாவந்து வசந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்ட கண்கொள்ளாக்காட்சியை பத்தர்கள் தரிசித்து நிற்றார்கள்
By theva • Allgemein • 0