• Mi. Okt 20th, 2021

சிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் மஹோற்சவப் பெருவிழா 12.08.2021 ஆரம்பமாகின்றது

Vontheva

Jul 21, 2021
சிறுப்பிட்டி வல்லையப்புலம் அருள்மிகுஸ்ரீகருணாகடாக்ஷி(மனோன்மணி)அம்பாள்தேவஸ்தானம் பிலவ வருஷ மஹோற்சவப் பெருவிழா 2021
சிறுப்பிட்டி வல்லையப்புலத்தில் சகல செல்வங்ளுடனும் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளி அருளாட்சி பிரியும் ஜெகன் மாதாவாகிய மஹா திரிபுர சுந்தரி அருள் மிகு ஸ்ரீ கருணாகடாச்க்ஷி (மனோன்மணி)அம்பிகைக்கு நிகழும் மங்கல கரமான பிலவ வருஷம் ஆடித்திங்கள் 27ம் நாள் 12.08.2021வியாழக்கிழமை காலை06. 00 மணிக்கு சங்கற்ப வழிபாடு. அதனைத் தொடர்ந்து 7.30 மணிக்கு அபிஷேகம். 8.00 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகள். 9.00 மணிக்கு வசந்தமண்டப பூசை. 10.00 மணிக்கு கொடியேற்றம் (துவஜாரோகணம்) ஆசிவழங்கல்,பிரசாதம் வழங்கல் பகல் 12.30 மணிக்கு விழா இனிதே நிறைவுறும். தினமும் மாலை 4.00 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி அதை தொடர்ந்து யாகசாலை பூஜைகள், கொடிதம்ப பூஜைகள்
நடைபெற்று அதனை தொடர்ந்து சுத்துப்பல்லி பூஜை நடைபெற்று வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்று அம்பாள் உள்வீதி உலாவு எழுந்தருளி யாகசாலை பூஜைகள் நடைபெற்று அம்பாள் வெளி வீதி வலம் வந்து அதை தொடர்ந்து அடியார்களுக்கு விபூதி, சந்தனம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டு 8.00 மணிக்கு
இரவு பூஜைக்கள் நிறைவு பெறும்.
தொடர்ந்து 12 தினங்களும் இரு வேளையும் திருவிழா நடைபெறும்.19.08.2021 மாலை 4.00 மணிக்கு வேட்டைத்திருவிழா 20.08.2021 மாலை 7.00 மணிக்கு சப்பறத்திருவிழா 21.08.2021சனிக்கிழமை 10ம் நாள் காலை 5.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி காலை 7.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை காலை 8.30 மணிக்கு தேர்த்திருவிழா 22.08.2021 காலை 9.00 மணிக்கு வசந்தமண்டப பூஜை 10.00மணிக்கு தீர்த்தோற்சவம், மாலை 7.00 மணிக்கு கொடியிறக்கம் 23.08.2021. 12ம் நாள் காலை 9.30மணிக்கு பிராயச்சித்த அபிஷேகம் மாலை 7.00 மணிக்கு திருக்கல்யாணம் விசாலாச்சி அம்பிகா சமேதே காசி விஸ்வநாதப்பெருமானுக்கும். 24.08.2021…13நாள் மாலை 7.00 மணிக்கு காத்தவராய சுவாமி, வைரவர் சுவாமிக்கும் அபிஷேகம் இடம்பெறும். அடியார்கள் இக்காலங்களில் ஆலயத்திற்கு வருகை தந்து (அரச சுகாதாரப்பிரிவின் நடைமுறைகளைப் பின்பற்றி) இறைவனை தரிசித்தும் அபிஷேகத்திற்கு வேண்டிய பால், தயிர், அறுகம்புல் ,பூவகை, தேங்காய், பூமாலை, தேங்காய் எண்ணெய் போன்ற சிவத்திரவியங்களை நல்கியும் அம்பாளினது இஸ்டசித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் சுபம்🙏
ஆலய பரிபாலனசபையினர்💕🙏
May be an image of 1 person
இ. நேமி, Vsk Kuna and 45 others
10 Comments
4 Shares
Like
Comment
Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.