• So. Jul 25th, 2021

வெற்றி முகத்துடன் காட்சியும் தருபவள்

Vontheva

Jul 18, 2021

ஆயிரம் பெயர் சொல்லி அழைத்தாளும்
அம்மா நீயவள் ஒன்றென்பேன்
அன்னைக்கு அன்னையாய்
ஆண்டு நிற்கும் தேவியே
தேவி உன் பாதம் பணிந்துநிற்போன்

கோடியாய் உயிர்கள் வாழ்தாலும்
தேடி உன்னை வந்து தொழுதிடுவார்
கொடிய நேய்கள் தான் வந்தாலும்
நாடி உனை தானே வேண்டிடுவார்
தீர்திட்டு வினைகளை காத்திட்டு நிற்பவள்
திரு முக அழகி நீயம்மா
காத்திட்டு உயிர்களை உலகமே போற்றிட
கூத்திரம் நாயகி நியம்மா

சாற்றிடும் மலர்கள் உனக்கம்மா
போற்றிடும் கரங்கள் உனையம்மா
வேற்றிடம் எமக்கு தேவை இல்லை
உன்னை வேண்டதல் என்றி வாழ்வில்லை
வேப்பிலை கொண்டு வேதனை தீர்பவள்
வெற்றி முகத்துடன் காட்சியும் தருபவள்
நாத்திட்டு நம்மை‌யே உலகத்தில் விட்டவள்
நம் வாழ்வுடன் அவள் தானே வாழ்திங்கே நிற்பவள்

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

கருவான திகதி 18.07.2021 உருவான நேரம்21.16 மணி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.