
திருக்கேதீஸ்வரம்;
இலங்கையில் உள்ள கோவில்களில் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருத்தலங்கள் இரண்டு.
ஒன்று ; திருக்கேதீஸ்வரம்
இரண்டு ; திருக்கோணேஸ்வரம்.
இரண்டுக்கும் இராவணன் காலத்தில் இருந்து சரித்திரம் கூறப்படுகிறது.
துர்திஸ்டவசமாக இவ்விரு கோவில்களும் திருகோணமலை நகரத்தில் இருந்தும்,
மன்னார் நகரத்தில் இருந்தும் சில கிலோமீற்றர்கள் தள்ளியே இருக்கின்றன.
எமது மக்கள் கடவுளை வணங்குவதிலும் தூரம் என்றால் ஏனோ கைவிட்டு விடுகிறார்கள்.
அருகில் உள்ள கோவிலை
வணங்கிவிட்டு போய்விடுகிறார்கள்.
சரித்திர பிரசித்தி பெற்ற இவ்விரு கோவில்களையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு சரியான முறையில் பராமரித்து கையளிக்க வேண்டியது தற்போது வாழுகின்ற ஒவ்வொரு தமிழனதும் கடமையும் , கட்டாயமுமாகிறது.
திருக்கோணேஸ்வரத்தின் அமைவிடம்
அதன் நிலப்பரப்பை கூட்ட முடியாதவாறு அமைந்திருக்கிறது.
சுற்றிவர கடலும் , செங்குத்தான மலையும் இதற்கான காரணமாகிறது..
குறிப்பிட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளபடியால் இப்போதுள்ள கட்டட அமைப்பில் இருப்பதே பெரிய விடயமாகிறது..
திருக்கேதீஸ்வரம்;
எமக்கு முதல் வாழ்ந்த தலைமுறைகளால் சரியாக பராமரிக்கப்பட்டு தற்போது உள்ள திருப்பணிச்சபையால் முறையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்திய அரசாங்கத்தால் திருக்கேதீஸ்வரத்தை புனரமைப்பு செய்வத்ற்காக வழங்கப்பட்ட நிதியால் மகாமண்டபங்கள் இன்று கருங்கல்லால் தலைநிமிர்ந்து நிற்கிறது.
அவர்கள் தமது குறிப்பிட்ட தொகையை வழங்கி
தமது வேலையை நிறைவு செய்துள்ளார்கள்.
திருப்பணிச்சபை மிகுதியாக உள்ள பிரகாரங்களையும் மகாமண்டபத்திற்கு பொருத்தமாக அமைப்பதற்கு கருங்கல்லினால் உருவாக்கி தற்போது 80% வீதமான வேலைகளை நிறைவு செய்துள்ளார்கள்.
எனினும் தொடர்ந்து கோவிலை நிர்வகிப்பதற்கும், முடிந்த வேலைகளுக்கான நிதியை செலுத்துவதற்கும் நிதிபற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
தற்போது உள்ள இலங்கை சூழ்நிலையில் இந்த கோவிலை கருங்கல்லால் கட்டி முறையாக இனிவரும் தலைமுறையிடம் கையளிக்காவிட்டால் கோவில் பெரும்பான்மையிடம் கைமாறவும் இடமுண்டு.
ஏனெனில்; தினசரி இவ்விரு கோவில்களுக்கும் வரும் தமிழர்களிலும் பார்க்க
வரும் பெரும்பான்மை இனபக்தர்கள் அதிகம்.
தற்போது கதிர்காமத்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலை எதிர்காலத்தில்
இவ்விரு கோவில்களுக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
வடகிழக்கில் அமைந்திருக்கும் இக்கோயில்களை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்விரு கோவில்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு முறையாக கையளிக்க வேண்டியது இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழனதும் கடமையாகிறது.
புலம்பெயர் தாடுகளில் உள்ள எமது தமிழ் மக்கள் “சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கமைய இதற்கான நிதி உதவியை வழங்கி மிகுதியாக இருக்கும் கட்டட வேலைகளை நிறைவுசெய்ய வேண்டும் என்பது காலத்தின் தேவையாகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலும் அந்தந்த ஊர் மக்களால் உதவிபெற்று அநேகமான கோவில்கள் புதுப் பொலிவு பெற்றிருக்கிறது.
திருக்கேதீஸ்வரத்தை பொறுத்தளவில் ஊர் என்ற ஒன்று கிடையாது.
இருந்தவர்களும் நாட்டு நிலவரம் காரணமாக இடம்பெயர்ந்து விட்டார்கள்.
இருந்தாலும் நிதி வழங்கும் பொருளாதார வசதி அவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் தினசரி கோவிலுக்கு வந்து வழிபடுவதே பெரியதொரு விடயமாக கருதவேண்டிய நிலை.
கோவிலை புனரமைத்து திருக்கேதீஸ்வரநகர குடிகளை மீள் குடியேற்ற வேண்டியதுகூட எதிர்காலத்தேவையாக அமையும்.
எனவே திருக்கேதீஸ்வரம் எந்த ஊருக்கும் சொந்தமற்ற என்ற அநாதை
நிலை மாறி
முழு தமிழ் இனத்திற்கும் உரிய சொத்து என்ற நிலை வரவேண்டும்.
திருக்கேதீஸ்வர திருவிழாக்கள் யாவும் நாட்டில் உள்ள தமிழ் பாடசாலைகளால் நடாத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
மிகுதி கட்டட வேலைகளை அடுத்த வருடம் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்தற்கு முதல் நிறைவேற்ற வேண்டியது எம்போன்ற சிவன் அடியார்களின் அன்பு வேண்டுகோள்.
சிவன் வழிபாடு என்பது சங்ககாலத்திற்கும் முற்பட்டது.
சிவவழிபாட்டை தொடர்ந்து அடுத்துவரும் தலைமுறைகளுக்கு கடத்தவேண்டியது இன்றுள்ள மக்களின் தலையாய கடமையாகிறது.
புதிய கோவில்களை அமைப்பதிலும் பார்க்க சரித்திரபிரசித்த பெற்ற
கோவில்களை முறையாக பராமரித்து அழிக்க முடியாதவாறு கருங்கல்லால் அமைத்து காப்பாற்ற வேண்டியது
காலத்தின் கட்டாயம்.
சங்கங்களுக்கு வலிய பணம் சேர்ப்பதிலும்,
சமூக சேவைகளுக்கு வலிந்து பணம் அறவிடுவதிலும் அதிக நாட்டம் எனக்கு ஒரு போதும் இருந்தத்தில்லை.
எனினும்,
சிவவழிபாட்டை அழிந்து விடாது பாதுகாத்து காப்பற்றி கடத்த வேண்டியதன்
முக்கியத்துவத்தை உணர்ந்ததன் விளைவாக இதை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது.
முடியமானளவு நிதி உதவி செய்து இலங்கை தமிழர்களின் பொதுவான சொத்தான திருக்கேதீஸவரத்தை காப்பாற்றுவோம்.
தொடர்பு கொள்ளப்படவேண்டியவர்களின் இலக்ங்களும்,
வங்கி இலக்கங்களும் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி.
Okt 6 2020
திருக்கேதீஸ்வரம்;
By theva • ஆலய நிகழ்வுகள் • 0