இணுவை மண்ணில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மடை சிறப்பாக நடைபெற்றது.

இணுவை மண்ணில் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் பத்திரகாளிக்கான மடை இன்று வட்டுவினி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மடை என்றால் அது எங்கள் ஊரைப் பொறுத்தவரை மீன் படையலாகத்தான் இருக்கும். இணுவில் கிழக்கின் சிவகாமி அம்மனுக்கு பின்புறத்திலும் இணுவில் மேற்கில் வட்டுவினி கண்ணகி அம்மனுக்கு பின் புறத்திலும் பத்திரகாளி கோவில்கள் உள்ளன இந்த இரு கோவில்களிலும் மற்றும் இணுவிலிலுள்ள இளந்தாரி கோவில்களிலும் அண்ணமார் கோவிலிலும் இந்த மச்ச மடை நடைபெறும்.
இன்று இணுவில் மேற்கு வட்டுவினியில் அமைந்துள்ள பத்திரகாளிக்கு அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் இணைந்து பொங்கி மடைபரவி வழிபாடு நிகழ்த்தியுள்ளார்கள்.
கண்ணகி அம்மனுக்கு லச்சார்சனை நடைபெற்று குளிர்த்தி நிறைவடைய வரும் வாரத்தில் பத்திரகாளிக்கு மடை பரவுதல் நடைபெறும்.
இந்த மடை பரவும் முறையை தடை செய்ய பலர் முயன்றபோதும் ஊர் மக்களின் ஒருமித்த குரலால் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
படங்கள்: நன்றி: அபிராமி