வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 10 தினங்கள் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழா விஞ்ஞாபனத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி சப்பறத்திருவிழாவும், 30 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் இடம்பெறும்.

பூசைபுணருத்தான பணிகளில் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ முத்து இரத்தின வைத்தியநாதக்குருக்கள், ஆலய ஸ்தானிககுரு சிவஶ்ரீ ஜெகதீஸ்வரமயூரக்குருக்கள் மற்றும் ஜெகதீஸ்வரக்குருக்களும் பங்கெடுத்துள்ளனர்.