• Di. Okt 19th, 2021

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னக் கதிர்காமம்

Vontheva

Aug 26, 2020
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை – வெருகல் பகுதியில் அமைந்திருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மஹோட்சபத் திருவிழாவின் கொடியேற்றம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது முதலில் பிரதான மண்டப பூஜை வழிபாடுகளும், யாகப் பூஜைகளும் இடம்பெற்றன.அதன் பின்னர் வசந்த மண்டப பூஜைகள்  இடம்பெற்று இதன் பின்னர் கொடியேற்றமும் ,அபிஷேக வழிபாடுகளும் இடம்பெற்றன.
இதன் பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் முருகன்,வல்லி,தெய்வானை,பிள்ளையார் ,சிவன்,உமை போன்ற தெய்வங்கள் எழுந்தருளி செய்து உள்வீதி உலாவந்து வசந்த மண்டபத்தை சென்றடைந்தது.
வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் இன்று ஆரம்பமான கொடியேற்றத்துடன் தொடர்ச்சியாக 18 நாட்கள் திருவிழா நடைபெற்று செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி காலை மஹாவலி கங்கையில் ஆற்றில் இடம்பெறும் தீர்த்த உட்சவத்துடன் கொடியிறக்கம் இடம்பெற்று திருவிழா நிறைவு பெறும்.
தகவல்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.