நல்லூர் சிவன் கோவில் தேவி மகோற்சவம் பற்றிய ஆலய அறிவிப்பு

 
கமலாம்பிகா சமேத கைலாசநாத ஆலய சார்வாரி வருட (2020ம்) ஆண்டிற்கான தேவி மகோற்சவம் பற்றிய அறிவித்தலை தேவஸ்தானம் மேற்படி அறிவுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையாலும் Covid – 19 நோய்த்தொற்று காரணமாகவும் அரசாங்கத்தின் சட்டவிதிகளை மதித்து எதிர்வரும் 27/05/2020 புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள வைகாசி மஹோற்சவமானது இம்முறை சாதாரணமாக விஷேட அபிஷேகம் மற்றும் வசந்தமண்டப பூஜைகளுடன் மட்டும் இடம்பெறும் என்பதனை அடியவர்களுக்கு அறியத்தருகின்றோம். மஹோற்சவ நாட்களில் தினமும் காலை 07.00 மணிக்கு ஸ்ரீ கமலாம்பிகை அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகங்கள் ஆரம்பமாகி தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடுகளும் 08.00 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் இடம்பெறும்.
☆ ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் நீர் மற்றும் சவர்க்காரம் கொண்டு கைகளை நன்றாக சுத்தம் செய்யவும்.
☆ ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
☆ வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் ஏனைய அடியவர்க்கிடையில் சமூக இடைவெளியை பேணவும்.
☆ சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைவாக நடந்து கொள்ளவும்.
என்ற அறுவுறுத்தல்களையும் ஆலயம் வேண்டியுள்ளது.