செல்வச்சந்நிதியானுக்கு (30.08.2019)நாளை கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி யாழ்ப்பாணம் தொண்டைமானாறு ஸ்ரீசெல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை(30) பிற்பகல்-04 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 15 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் அடுத்தமாதம்-08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணிக்கு பூங்காவன உற்சவமும், 09 ஆம் திகதி காலை- 08 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 12 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல்-06 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-08 மணிக்கு தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை காலை-08 மணிக்குத் தீர்த்தோற்சவமும், மாலை-06 மணியளவில் மெளனத் திருவிழாவும் நடைபெறும்.

சிவஸ்ரீ சிவானந்த ஐயர் செல்வமணி ஐயர் உற்சவகால கிரியைகளை நிகழ்த்தவுள்ளதுடன் உற்சவகாலங்களில் வழமை போன்று அன்னதானமும் சிறப்புற இடம்பெறவுள்ளது.