பேர்லின்பதி வேலனுக்கு மஞ்சத்திருவிழா 15.08.2019சிறப்பாக நடந்தேறியது

பத்தாம் திருவிழா
15.08.19
„மஞ்சத்திருவிழா இன்று மஞ்சத்திருவிழா
மயூரபதி மயூரனைக்கு மஞ்சத்திருவிழா
பேர்லின்பதி வேலனுக்கு மஞ்சத்திருவிழா
Blaschkoallee தனில் குடியிருந்து
பக்தர் குறைகளெல்லாம் தீர்க்கும்
எங்கள் பாலமுருகன்“
பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலய விகாரி வருட மஹோற்சவத்தின் பத்தாந்திருவிழா (பஞ்சம்) மிகச்சிறப்பாக நடைபெற்றது. விசேட அபிடேக ஆராதனைகளுடன் ,சிவாச்சாரியார்களின் வோதோத்த மந்திரங்கள் ஒலிக்க,மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவார பாராயணங்களால் பக்தி பொங்க ,முத்தமிழும் அணி சேர்க்க ,சோடனை உபசாரங்கள் மஞ்சள் வர்ணத்தால் அலங்கரிக்க ,பிரசாதங்கள் அடியார்களை மகிழ்விக்க,ஆலயம் நிறை பக்தர் புடைசூழ பேரின்பம் பொங்க கஜவல்லி மகாவல்லி சமேதர்ராய் மயூரபதியான் வலம் வந்த திருக்கோலம் கண்கொள்ளாக்காட்சி…🙏👌👏👍மயூரபதியான் மகிமை உலகெங்கும் பரவட்டும்