வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா இன்று வியாழக்கிழமை(15) சிறப்பாக இடம்பெற்றது.
வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து பிற்பகல்-05.30 மணியளவில் முத்துக்குமாரசுவாமி வள்ளி- தெய்வயானை சமேதராக வெளிவீதியில் எழுந்தருளினார்.
சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும், சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய திருமஞ்சத்தில் நல்லூரான் எழுந்தருளியதைத் தொடர்ந்து பிற்பகல்-05.45 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் புடை சூழ, அடியவர்களின் அரோகராக் கோஷத்தின் மத்தியில் மஞ்சரத பவனி ஆரம்பமாகியது.
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் இச்சாசக்தி- கிரியா சக்திகளான காரிகையர் இருவருடன் நல்லைக்கந்தன் மெல்ல மெல்ல ஆடி அசைந்து வந்த காட்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
மஞ்சரதமேறி கந்தன் உலா வந்த வேளையில் அடியவர்கள் சிலர் பக்திப் பரசவத்துடன் செதில் காவடிகள் ஆடியும், பஜனைகள் பாடியும் பக்திபூர்வமாக வழிபட்டனர்.
Aug 15 2019
பல்லாயிரக்கணக்காண அடியவர்கள் புடைசூழ மஞ்சரதமேறி அருள்பாலித்த நல்லூரான்

By theva • ஆலயதரிசனம் • 0