பிரான்ஸ் லா கூர்னோவ் சிறி சித்திவிநாயகர் ஆலயத்தின் 13 வது தேர்த்திருவிழா

பிரான்ஸ் லா கூர்னோவ் பகுதியில் எழுந்தருளியுள்ள, கடந்த 30 ஆண்டுகால வரலாற்றைக்கொண்ட சிறி சித்திவிநாயகர் ஆலயத்தின் 13 வது தேர்த்திருவிழா 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பெருந்தொகையான பக்தர்கள் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டார்கள்.
பிரான்ஸ் நாட்டின் காவல்துறையினர் வீதிப்போக்குவரத்து ஒழுங்குகளையும் பாதுகாப்பையும் வழங்கியிருந்தார்கள்.
லா கூர்னோவ் பகுதியில் பெருந்தொகையான ஈழத்தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த ஆலயத்துடன் மூன்றாம் தலைமுறை இளையோர் பெரும் எண்ணிக்கையில் இணைந்திருக்கின்றார்கள்.
சிறந்த நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டதான சிறி சித்தி விநாயகர் ஆலயத்தில் தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெற்று வருவதுடன் வெள்ளி, செவ்வாய் தினங்களிலும் விசேட நாட்களிலும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பிரான்ஸ் லா கூர்ளோவ் சிறி சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நேரஞ்சலாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது.