ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி!

தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இது போன்ற அதிசயங்கள் நிகழ்கின்றது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். வருடத்திற்கு ஒருமுறை தங்க நிறத்திற்கு மாறும் அதிசய நந்தி சிலையை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? வாருங்கள் இந்த அதிசய நந்திபகவானை பற்றிய அறிய தகவல்களை தெரிந்துகொள்வோம் .

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவருடன், தட்சணாமூர்த்தி, பாலமுருகன், நவகிரகம் மற்றும் கோயில் வளாகத்தில் மிக பெரிய நந்தி உள்ளது. இந்த கோயிலின் முன் உள்ள நந்தீஸ்வரர் வருடத்திற்கு ஒருமுறை பங்குனி மாதம் 3-ம் நாள் அன்று மட்டும் சில நிமிடங்கள் தங்க நிறமாக மாறும் அதிசய தரிசனத்தை பல லட்சம் மக்கள் தரிசித்து வருகின்றனர்.

இந்த அதிசய நிகழ்வு முதன்முதலாக கடந்த 2012-ம் ஆண்டு பங்குனி மாதம் 3-ம் தேதி பிரதோஷ வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது திடீரென சூரியஒளி இராஜகோபுரத்தின் மீது பட்டு பிறகு நந்தியின் மீது அந்த சூரிய ஒளி பட்டதும் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிர்ந்து காட்சியளித்தார்.

இந்த அதிசய நிகழ்விற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 3-ம் நாள் பக்தர்கள் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் திரண்டு நந்தி பகவானின் அருளை பெற்று மகிழ்கின்றனர்.