யாழ்.வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

ஈழத்தின் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(03) முற்பகல்-10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 21 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்  இருபதாம் திகதி புதன்கிழமை காலை-09 மணிக்குப் பஞ்சரத பவனியும், மறுநாள் வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தோற்சவமும் நடைபெறும்.