சுவிஸ். சூரிச் அருள் மிகு சிவன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா 2018

, சுவிஸ். சூரிச் 15.06.2018 வெள்ளக்கிழமை கொடியேற்றத் திருவிழா, 22.06.2018 வெள்ளிக்கிழமை சப்பறத் திருவிழா 23.06.2018 சனிக்கிழமை தேர்த் திருவிழா 24.06.2018 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது குருமார் விபரம்
மஹோற்சவ குரு, (ஆலய பிரதம குரு)
சிவகைங்கர்ய துரந்தரர் சிவப்பிரியர் வேதசிவாகமநிதி
சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள்.
சிறப்புக் குருமார் “வேதாகமசீலர்
சிவாச்சார்யரத்தினம், சிவாகமகிரியா” சிவஶ்ரீ இ.சிவசண்முகநாதக்குருக்கள்(கரணவாய் சிவன் கோவில் பரம்பரைக்குரு) ‚சிவாகம ரெத்தினம் சிவாகம சாகரம“ ந.இராமு அகஸ்தீஸ்வரக் குருக்கள்
(மதுரை மீனாட்சியம்பாள்தேவஸ்தானம்)
உதவிக்குருமார்கள் சிவாகம பூஷணம் சிவஶ்ரீ இராம் முரளிதரக்குருக்கள்(ஜேர்மனி )
சிவஶ்ரீ சி.சோமாஸ்கந்த சர்மா(லண்டன்)
சிவசிறி சிவராம சர்மா(லண்டன்)
மற்றும் சுவிஸ் நாட்டில் உள்ள ஏனைய அந்தணப்பெருமக்களும் கலந்து சிறப்பிப்பார்கள்.
இந்த ஆண்டு சிவன் ஆலயத்தின் ஆஸ்த்தான வித்துவான் புண்ணியமூர்த்தி கலைச்செல்வன் குழுவினரோடு நாதஸ்வர இளவரசன் பஞ்சமூர்த்தி குமரன் அவர்களும் கலந்து சிறப்பிப்பார் 23.06.2018 தேர் தினத்தில் வெளியரங்கில் காத்தவராயன் கூத்து இன்னும் பல கலை நிகழ்வுகள் நடைபெறும்.