ஹம் ஸ்ரீ ஆறுமுக வேலழகன் ஆலய18 வது வருட நிறைவு சங்காபிசேகம் நடைபெற்றது.

ஜெர்மனி -ஹம் புண்ணிய பூமியில்
எழுந்தளுளி அருள்புரியும் திரு நல்லூர் ஸ்ரீ ஆறுமுக வேலழகன் ஆலயம்
இன்று 18 வது வருட நிறைவு சங்காபிசேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிசயம் என்ன என்றால் கவிக்குமரன் லம்போதரன் இயற்றிய முருகன் ஊஞ்சல் பாமாலை கவிஞரே பாமாலை பாடி முருகன் உள்வீதி வரும் போது அழகன் ஆலய மயில் வரவேற்பு நடனம் ஆடிய காட்சி பக்தர்கள் ஒருகணம் தம்மை ஆறியாது முருகா முருகா என கரம் கரம் குவித்த காட்சி மெய் சிலுர்க்க வைத்தது உங்களுக்கும் எல்லாம் வல்ல முருகன் அருள் புரிவாராக . இன்னும் இரு வாரங்களில் இப்பதிவை காணலாம் .
வந்தவினை தீர்க்க வந்த ஹம் முருகா
வேண்டும் வரம் கொடுக்க வந்த அழகா
ஹம் பதியில் மேவுபுகழ் வேல் அழகா
கண் திறந்து உலகாளும் மால் மருகா
-ஈழமுருகதாசன் 01.05.2018