எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை !

அன்பார்ந்த வேல்முருகன் அடியார்களே!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி முருகபெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி தேய்வானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி இடம்பெற இருக்கின்றது என்பதனை முருகன் அடியார்களுக்கு அறியத் தருகிறோம்

அன்றைய தினம் உபயகாரர்களாக விஜயசிங்கம் குடும்பம் (Slagelse ) சிறப்பிக்கின்றார்கள்

மருத்து நீர் 13/04/2017 அன்று மாலை 19.00 மணிக்கு ஆலயத்தின் பூசை நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூசை நேரத்தில் பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்கள் அன்றையதினம் ஆலய குருக்களிடம் பெற்றுக்கொள்ளலாம்

மேலதிக தொடர்புகளுக்கு ஆலயம் -52509980 / தலைவர் அன்னலிங்கம் 22980112
செயலாளர் * இளமுருகன் – 21661604 / பொருளாளர் பவானந்தன் 21847814
ஆலய பரிபாலனம் – அம்பிகைபாலன் 91531801

இறைபணியில் ஆலய நிர்வாகசபை

Merken