ststamil
Eine weitere WordPress-Website
RSS
  • Home
  • Beispiel-Seite
  • 142043213_1046449642512587_3681180760138869346_o

    அருள் மிகு சிறுப்பிட்டி மனோன்மணி ஆயத்தில் இடம்பெற்ற தைப்பூசம்.

  • template (1)

    திருக்கேதீஸ்வரம்;

  • IMG-20201001-WA0000

    சிறுப்பிட்டி மனோன்மணிஆலய புரட்டாதிச் சனி பூஜைகள் சிறப்பாக நடந்தே றüயது

  • 110334059_2594912897397147_1066310258502865984_o

    சிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்துக்கு திரு. சந்திரசேகரம் மகிந்தன் அவர்களினால் மின் உபகரணம் (washing machine) அன்பளிப்பு செய்யப்பட்டது.

  • template

    இணுவை மண்ணில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மடை சிறப்பாக நடைபெற்றது.

  • 41326710_1664293147032257_5254851319394467840_o

    வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா!

  • 41326710_1664293147032257_5254851319394467840_o

    யேர்மன் கம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா இன்றய நிலைக்கேற்ற ஒழுங்கமைப்புகளுடன் நடைபெற்றது

142043213_1046449642512587_3681180760138869346_o

Jan 28 2021

அருள் மிகு சிறுப்பிட்டி மனோன்மணி ஆயத்தில் இடம்பெற்ற தைப்பூசம்.

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷம் இன்றைய இனிய தைப் பூச உற்சவத்தில் அபிஷேக பூஜை வழிபாடுகள் அலங்கார தீபாரதனைகள் அம்பாள் உள் வீதி உலா. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத் தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

template (1)

Okt 6 2020

திருக்கேதீஸ்வரம்;

திருக்கேதீஸ்வரம்;
இலங்கையில் உள்ள கோவில்களில் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருத்தலங்கள் இரண்டு.
ஒன்று ; திருக்கேதீஸ்வரம்
இரண்டு ; திருக்கோணேஸ்வரம்.
இரண்டுக்கும் இராவணன் காலத்தில் இருந்து சரித்திரம் கூறப்படுகிறது.
துர்திஸ்டவசமாக இவ்விரு கோவில்களும் திருகோணமலை நகரத்தில் இருந்தும்,
மன்னார் நகரத்தில் இருந்தும் சில கிலோமீற்றர்கள் தள்ளியே இருக்கின்றன.
எமது மக்கள் கடவுளை வணங்குவதிலும் தூரம் என்றால் ஏனோ கைவிட்டு விடுகிறார்கள்.
அருகில் உள்ள கோவிலை
வணங்கிவிட்டு போய்விடுகிறார்கள்.
சரித்திர பிரசித்தி பெற்ற இவ்விரு கோவில்களையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு சரியான முறையில் பராமரித்து கையளிக்க வேண்டியது தற்போது வாழுகின்ற ஒவ்வொரு தமிழனதும் கடமையும் , கட்டாயமுமாகிறது.
திருக்கோணேஸ்வரத்தின் அமைவிடம்
அதன் நிலப்பரப்பை கூட்ட முடியாதவாறு அமைந்திருக்கிறது.
சுற்றிவர கடலும் , செங்குத்தான மலையும் இதற்கான காரணமாகிறது..
குறிப்பிட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளபடியால் இப்போதுள்ள கட்டட அமைப்பில் இருப்பதே பெரிய விடயமாகிறது..
திருக்கேதீஸ்வரம்;
எமக்கு முதல் வாழ்ந்த தலைமுறைகளால் சரியாக பராமரிக்கப்பட்டு தற்போது உள்ள திருப்பணிச்சபையால் முறையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்திய அரசாங்கத்தால் திருக்கேதீஸ்வரத்தை புனரமைப்பு செய்வத்ற்காக வழங்கப்பட்ட நிதியால் மகாமண்டபங்கள் இன்று கருங்கல்லால் தலைநிமிர்ந்து நிற்கிறது.
அவர்கள் தமது குறிப்பிட்ட தொகையை வழங்கி
தமது வேலையை நிறைவு செய்துள்ளார்கள்.
திருப்பணிச்சபை மிகுதியாக உள்ள பிரகாரங்களையும் மகாமண்டபத்திற்கு பொருத்தமாக அமைப்பதற்கு கருங்கல்லினால் உருவாக்கி தற்போது 80% வீதமான வேலைகளை நிறைவு செய்துள்ளார்கள்.
எனினும் தொடர்ந்து கோவிலை நிர்வகிப்பதற்கும், முடிந்த வேலைகளுக்கான நிதியை செலுத்துவதற்கும் நிதிபற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
தற்போது உள்ள இலங்கை சூழ்நிலையில் இந்த கோவிலை கருங்கல்லால் கட்டி முறையாக இனிவரும் தலைமுறையிடம் கையளிக்காவிட்டால் கோவில் பெரும்பான்மையிடம் கைமாறவும் இடமுண்டு.
ஏனெனில்; தினசரி இவ்விரு கோவில்களுக்கும் வரும் தமிழர்களிலும் பார்க்க
வரும் பெரும்பான்மை இனபக்தர்கள் அதிகம்.
தற்போது கதிர்காமத்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலை எதிர்காலத்தில்
இவ்விரு கோவில்களுக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
வடகிழக்கில் அமைந்திருக்கும் இக்கோயில்களை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்விரு கோவில்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு முறையாக கையளிக்க வேண்டியது இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழனதும் கடமையாகிறது.
புலம்பெயர் தாடுகளில் உள்ள எமது தமிழ் மக்கள் “சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கமைய இதற்கான நிதி உதவியை வழங்கி மிகுதியாக இருக்கும் கட்டட வேலைகளை நிறைவுசெய்ய வேண்டும் என்பது காலத்தின் தேவையாகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலும் அந்தந்த ஊர் மக்களால் உதவிபெற்று அநேகமான கோவில்கள் புதுப் பொலிவு பெற்றிருக்கிறது.
திருக்கேதீஸ்வரத்தை பொறுத்தளவில் ஊர் என்ற ஒன்று கிடையாது.
இருந்தவர்களும் நாட்டு நிலவரம் காரணமாக இடம்பெயர்ந்து விட்டார்கள்.
இருந்தாலும் நிதி வழங்கும் பொருளாதார வசதி அவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் தினசரி கோவிலுக்கு வந்து வழிபடுவதே பெரியதொரு விடயமாக கருதவேண்டிய நிலை.
கோவிலை புனரமைத்து திருக்கேதீஸ்வரநகர குடிகளை மீள் குடியேற்ற வேண்டியதுகூட எதிர்காலத்தேவையாக அமையும்.
எனவே திருக்கேதீஸ்வரம் எந்த ஊருக்கும் சொந்தமற்ற என்ற அநாதை
நிலை மாறி
முழு தமிழ் இனத்திற்கும் உரிய சொத்து என்ற நிலை வரவேண்டும்.
திருக்கேதீஸ்வர திருவிழாக்கள் யாவும் நாட்டில் உள்ள தமிழ் பாடசாலைகளால் நடாத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
மிகுதி கட்டட வேலைகளை அடுத்த வருடம் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகத்தற்கு முதல் நிறைவேற்ற வேண்டியது எம்போன்ற சிவன் அடியார்களின் அன்பு வேண்டுகோள்.
சிவன் வழிபாடு என்பது சங்ககாலத்திற்கும் முற்பட்டது.
சிவவழிபாட்டை தொடர்ந்து அடுத்துவரும் தலைமுறைகளுக்கு கடத்தவேண்டியது இன்றுள்ள மக்களின் தலையாய கடமையாகிறது.
புதிய கோவில்களை அமைப்பதிலும் பார்க்க சரித்திரபிரசித்த பெற்ற
கோவில்களை முறையாக பராமரித்து அழிக்க முடியாதவாறு கருங்கல்லால் அமைத்து காப்பாற்ற வேண்டியது
காலத்தின் கட்டாயம்.
சங்கங்களுக்கு வலிய பணம் சேர்ப்பதிலும்,
சமூக சேவைகளுக்கு வலிந்து பணம் அறவிடுவதிலும் அதிக நாட்டம் எனக்கு ஒரு போதும் இருந்தத்தில்லை.
எனினும்,
சிவவழிபாட்டை அழிந்து விடாது பாதுகாத்து காப்பற்றி கடத்த வேண்டியதன்
முக்கியத்துவத்தை உணர்ந்ததன் விளைவாக இதை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது.
முடியமானளவு நிதி உதவி செய்து இலங்கை தமிழர்களின் பொதுவான சொத்தான திருக்கேதீஸவரத்தை காப்பாற்றுவோம்.
தொடர்பு கொள்ளப்படவேண்டியவர்களின் இலக்ங்களும்,
வங்கி இலக்கங்களும் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி.
1Muthukumr Alayam Hauskam

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

IMG-20201001-WA0000

Okt 3 2020

சிறுப்பிட்டி மனோன்மணிஆலய புரட்டாதிச் சனி பூஜைகள் சிறப்பாக நடந்தே றüயது

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷம் இன்றைய நிகழ்வாக புரட்டாதிச் சனி அபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. எதிர்வரும் „01“ சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு புரட்டாதிச் சனி அபிஷேக பூஜைகள் நடைபெறும்…

By theva • ஆலயதரிசனம் • 0

110334059_2594912897397147_1066310258502865984_o

Sep 23 2020

சிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்துக்கு திரு. சந்திரசேகரம் மகிந்தன் அவர்களினால் மின் உபகரணம் (washing machine) அன்பளிப்பு செய்யப்பட்டது.

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம். இன்று அடியவரால் கோயில் தேவை கருதி சந்திரசேகரம் மகிந்தன் அவர்களினால் 50000 பெறுமதியான மின் உபகரணம் (washing machine) அன்பளிப்பு செய்யப்பட்டது. வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாளும் காசி விஸ்வநாத பெருமாள் நல்லாசியுடன் வாழ்க நலமுடன்.கோயில் நிர்வாகம் சார்பாக நன்றிகள்…

தகவல் வி எஸ்.கே.குணா

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

template

Sep 23 2020

இணுவை மண்ணில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மடை சிறப்பாக நடைபெற்றது.

இணுவை மண்ணில் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் பத்திரகாளிக்கான மடை இன்று வட்டுவினி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மடை என்றால் அது எங்கள் ஊரைப் பொறுத்தவரை மீன் படையலாகத்தான் இருக்கும். இணுவில் கிழக்கின் சிவகாமி அம்மனுக்கு பின்புறத்திலும் இணுவில் மேற்கில் வட்டுவினி கண்ணகி அம்மனுக்கு பின் புறத்திலும் பத்திரகாளி கோவில்கள் உள்ளன இந்த இரு கோவில்களிலும் மற்றும் இணுவிலிலுள்ள இளந்தாரி கோவில்களிலும் அண்ணமார் கோவிலிலும் இந்த மச்ச மடை நடைபெறும்.
இன்று இணுவில் மேற்கு வட்டுவினியில் அமைந்துள்ள பத்திரகாளிக்கு அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் இணைந்து பொங்கி மடைபரவி வழிபாடு நிகழ்த்தியுள்ளார்கள்.
கண்ணகி அம்மனுக்கு லச்சார்சனை நடைபெற்று குளிர்த்தி நிறைவடைய வரும் வாரத்தில் பத்திரகாளிக்கு மடை பரவுதல் நடைபெறும்.
இந்த மடை பரவும் முறையை தடை செய்ய பலர் முயன்றபோதும் ஊர் மக்களின் ஒருமித்த குரலால் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
படங்கள்: நன்றி: அபிராமி

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

41326710_1664293147032257_5254851319394467840_o

Sep 22 2020

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா!

facebook sharing button 
whatsapp sharing button
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 10 தினங்கள் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழா விஞ்ஞாபனத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி சப்பறத்திருவிழாவும், 30 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் இடம்பெறும்.

பூசைபுணருத்தான பணிகளில் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ முத்து இரத்தின வைத்தியநாதக்குருக்கள், ஆலய ஸ்தானிககுரு சிவஶ்ரீ ஜெகதீஸ்வரமயூரக்குருக்கள் மற்றும் ஜெகதீஸ்வரக்குருக்களும் பங்கெடுத்துள்ளனர்.

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

41326710_1664293147032257_5254851319394467840_o

Sep 21 2020

யேர்மன் கம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா இன்றய நிலைக்கேற்ற ஒழுங்கமைப்புகளுடன் நடைபெற்றது

யேர்மன் கம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா இன்றய நிலைக்கேற்ற ஒழுங்கமைப்புகளுடன்  தேர்த்திருவிழா
20. 09.2020 சிறப்பாக நடைபெற்றது .

By theva • ஆலயதரிசனம் • 0

41326710_1664293147032257_5254851319394467840_o

Sep 19 2020

சிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தில் சனி அபிஷேக பூஜை வழிபாடுகள்

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷம் இன்றைய நிகழ்வாக புரட்டாதிச் சனி அபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. எதிர்வரும் „3“ சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு புரட்டாதிச் சனி அபிஷேக பூஜைகள் நடைபெறும்..

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

41326710_1664293147032257_5254851319394467840_o

Sep 18 2020

ஜேர்மனி.பிறேமன் ஸ்ரீசிவசக்திக்குமரன் ஆலயத்தில் சனீஸ்வரர் பூஜைகள் சிறப்பு வழிபாடு

ஜேர்மனி.பிறேமன் ஸ்ரீசிவசக்திக்குமரன் ஆலயத்தில் சனீஸ்வரர் பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் (புரட்டாதிசனி)விரதபூஜைகள்.நவக்கிரக
தோஷநிவாரண அர்ச்சனைகள் காலை
10.30.மணிக்கு ஆரம்பமாகிறது.நண்பகல் 12.00 மணிக்கு விஷேடபூஜை தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெற்று பிரசாதங்கள்
அன்னதானமும் வழங்கப்படும் . அடியார்கள் உரியநேரத்திற்கு வருகைதந்து எல்லாம் வல்ல குமரப்பெருமான்.திருவருள் பெற்றேகுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .
…. ஆலய.
. . . …… …. நிர்வாகத்தினர்

By theva • ஆலய நிகழ்வுகள் • 0

41326710_1664293147032257_5254851319394467840_o

Sep 17 2020

ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்த்ரமௌலீஸ்வர்ர் ஆலய ராஜகோபுர திருப்பணி பூஜைகளில் கலந்துகொண்ட கொம்புறூக் காவல்துறை

ஶ்ரீ சாந்தநாயகி சமேத சந்த்ரமௌலீஸ்வர்ர் ஆலய ராஜகோபுர திருப்பணி பூஜைகளில் கலந்துகொண்ட கொம்புறூக் காவல்துறை அதிகாரியோடும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு அணைத்தும் நல்லவிதமாக நடைபெற வேண்டும்

By theva • ஆலயதரிசனம் • 0

1 2 3 4 5 >»

STSLivetv


டோட்முண்ட் சிவன் ஆலயத்தின் 7வது கொடியேற்றம் 24.06.17) ஆரம்பம்

யேர்மனியில் ஹம் காமாட்சி அம்பாள் 9வது திருவிழா 20.06.17

↑

© ststamil 2021
Powered by WordPress • Themify WordPress Themes